கொல்லிமலை பகுதியில் கனமழையால் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலை பகுதியில் கனமழையால் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு
X

கொல்லிமலையில் பெய்த கனமழையால், மலைப்பாதையில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த தொடர்மழையால், மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலை மீது செல்வதற்கு 75 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், கொல்லிமலை மீது உள்ள ஆகாய கங்கை அருவி, நம்ம அருவி, மாசிலா அருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அருவில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.

கனமழையால் மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசிவளைவு எண். 30, 31, 32-ஆகிய பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.

மண், கற்கள் மற்றும் பாறைகள் ரோட்டில் சரிந்து விழுந்ததால் மலைப்பாதையில் தடை ஏற்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியை சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி நேரில் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவு சீரமைக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!