மளிகைக்கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது
பைல் படம்.
Goondas Act in Tamil - நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாற்றுப்பாதையின் அடிவாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சதீஷ்குமார் (34). கடந்த மாதம், இவருடைய கடையில் இருந்து சுமார் 45 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின்பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங், மளிகைக் கடைக்காரர் சதீஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டர். இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள சதீஷ்குமாரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu