சேந்தமங்கலம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

சேந்தமங்கலம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

சேந்தமங்கலம் அருகே பெரியகுளம் கிராமத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை, திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பெரியகுளம் கிராமத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில், தமிழக முதல்வர், ஸ்டாலின், கொரோனா தொற்றால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியை, ஆஸ்பத்திரியில்நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 97-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்க விழா, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்கல், நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிடுதல் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. திரளான பொதுமக்கள், இக்கண்காட்சியினை நேரில் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!