கொல்லிமலை மலைப்பாதையில் அரசு பஸ் விபத்து: உயிர் தப்பிய பயணிகள்

கொல்லிமலை மலைப்பாதையில் அரசு பஸ் விபத்து: உயிர் தப்பிய பயணிகள்
X

கொல்லிமலை மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பஸ் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

கொல்லிமலையில் அரசு பஸ் மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளனாது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினார்கள்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள பைல்நாடு, எடப்புளி நாடு, பெரக்கரை நாடு, சித்தூர் நாடு, திருப்புளி நாடு ஆகிய பகுதிளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நரியன்காடு மாற்றுப்பாதையின் அடிவாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இவர்கள் தினசரி அரசு பஸ் மூலம் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை செங்கரை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்சில் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் முள்ளுக்குறிச்சி அடிவாரம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல் பூசணி குழிப்பட்டி அருகே வந்தபோது பஸ் திடீரென பழுதடைந்து நிலைதடுமாறி மலைப்பாதையின் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து அலறினார்கள். அதிர்ஷ்டவசமாக பஸ் கவிழாமல் நின்றதால், பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள், பயணிகள் காயமின்றி தப்பினர். டிரைவர் குணசேகரனின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து செங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture