சேந்தமங்கலம் பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி, பால் குட ஊர்வலம்

பைல் படம்.
Perumal Temple -சேந்தமங்கலத்தில் புராதன சிறப்புமிக்க அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கருட பஞ்சமி விழா மற்றும் சிறப்பு பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று நடைபெற்ற விழாவில் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி, பெரிய திருவடி ஸ்ரீ கருடாழ்வார் ஆகிய 3 தெய்வங்களுக்கும் பாலபிசேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கருட பஞ்சமி பால்குட ஊர்வலம் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கி, சேந்தமங்கலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இந்த ஊர்வலத்தில் திளான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து செல்ல முன்னதாக பசு, குதிரைகள் அழைத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் ஆழ்வார்கள் வேடமணிந்து வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், சீதாராமர் ஆகிய வேடங்கள் அணிந்த பக்தர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர். ராம நாமங்களை பாடி பக்தர்கள் நடனமாடி சென்றனர். பொய்க்கால் குதிரை நடனம், சேர்வை ஆட்டம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் கருடாத்திரி பக்த குழுவினர், கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் மற்றும் திளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu