சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக் கிடங்கில் தீ விபத்து

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக் கிடங்கில் தீ விபத்து
X

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, தாமக்கல் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து அங்கிருந்த குப்பை கூளங்கள் எரிந்தன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு, வண்டிப்பேட்டை அருகே உள்ளது. மாலை நேரத்தில், இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்தில் அங்கிருந்த குப்பை கூளங்கள் எரிந்தது.

காற்று வேகமாக அடித்ததால் தீ அருகில் இருந்த 2 மரங்களுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும் டவுன் பஞ்சாயத்து தலைவர் தலைவர் சித்ரா, செயல் அலுவலர் தனுஷ்கோடி, கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை பீட் என்ற வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தீ பிடித்து எரிந்தது. இதையறிந்து அங்க சென்ற வனத்துறை பணியாளர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!