சேந்தமங்கலம் மர அறுவை ஆலையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

சேந்தமங்கலம் மர அறுவை ஆலையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்
X

பைல் படம்.

சேந்தமங்கலம் மர அறுவை டெப்போவில்ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பொருட்கள் எரிந்து சேதமானது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் பொன்வேல் (50). மரம் அறுவை ஆலை டெப்போ நடத்தி வருகிறார். சம்பவத்ததன்று இரவு அந்த ஆலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ஆலையில் இருந்த மரப்பலகை, ரீப்பர்களில் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து சேதமாயின.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத்து துறையினர், நிலைய அலுவலர் ராஜேஷஸ்வரன் தலைøயில் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்தும், சேதம் குறித்தும் சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!