எருமப்பட்டி அருகே நிதி உதவி தொடக்க பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Inspection | Schools In Namakkal
X
பள்ளி சமையல் கூடத்தில் அதிகாரிகள் சோதை நடத்தினர்.
Inspection - எருமப்பட்டி அருகே அரசு நிதி உதவி தொடக்கப் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

Inspection - நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிப்பட்டியில், பாரதி மானிய நிதி உதவி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எருமப்பட்டி பி.டி.ஓ.க்கள் குணாளன், பிரபாகரன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் சமையல் கூடத்துக்கு சென்று சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு சமைக்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு தரம் குறித்து பரிசோதனை செய்தனர். உணவுப் பொருட்களின் இருப்பு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து விசாரித்தனர். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா, பஞ்சாயத்து தலைவர் அன்புமணி ராஜா, செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!