சேந்தமங்கலம் அருகே மது குடிப்பதை கண்டித்த மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
சேந்தமங்கலம் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்ட மகனை, கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம் அருகே உள்ள, பேளுக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (53). மிளகு வியாபாரி. இவருடைய மனைவி காமாட்சி (47). இவர்களது மகன் ஜீவானந்தம் (21), பெயிண்டிங் தொழிலாளி. ராஜ்குமார் மதுபோதையில் அடிக்கடி தனது மனைவி காமாட்சியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று, மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜ்குமார் தனது மனைவி காமாட்சியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது இருந்த அவரது மகன் ஜீவானந்தம் அவரைத் தட்டிக் கேட்டுள்ளாரர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜீவானந்தத்தை குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜீவானந்தத்தை மீட்டு, சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து காமாட்சி பேளுக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து மிளகு வியபாரி ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu