சேந்தமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு: போலீசார் விசாரணை

சேந்தமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள குப்பநாயக்கனூரை சேர்ந்தவர் தியாகராஜன் (51). விவசாயி. இவருடைய மனைவி செல்லக்கிளி (39). இவர்களுக்கு தம்பதிக்கு எஸ்வந்த் (13) என்ற மகன் உள்ளார்.

தியாகராஜன் தனது வீட்டுக்கு எதிரே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். அந்த கொட்டகையில் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இதனால் அதனைக் கட்டுப்படுத்த கொட்டகையில் மின்வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் மாட்டு கொட்டகையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவர் மின்வேலி மின் இணைப்பை துண்டிக்கவில்லை. அப்போது அவரது கால் மின்வேலி மீது பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology