எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்

எருமப்பட்டி அரகே பாம்பு கடித்ததால், விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

எருமப்பட்டி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் (56). சம்பவத்தன்று மாலை அவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர், நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வயலில் இருந்து பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தனது மகனுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!