கொல்லிமலை மிளகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அதிகாரிகள் ஆலோசனை

கொல்லிமலை மிளகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: அதிகாரிகள்  ஆலோசனை
X
கொல்லிமலையில் விளையும் மிளகை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடுத்த அரியூர் நாடு கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் சார்பில், கொல்லிமலை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிவனத்துக்கு, மிளகு மதிப்பு கூட்டுதல், அறுவடை பின்செய் நேர்த்தி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் மிளகு ஏற்றுமதி செய்ய, பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வேளாண் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மிளகின் தரம் அறிதல், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றும் முறை, அறுவடைக்கு பின் நேர்த்தி செய்தல், ஏற்றுமதி செய்வதற்காக சாத்தியக் கூறுகள் குறித்து விளக்கப்பட்டது. தேசிய வேளாண் நிறுவனத்தின் துணை இயக்குனர் பிரகாஷ், தனியார் நிறுவன தலைவர் பவி தேசாய், வேளாண் அலுவலர் பூங்கொடி, தேசிய வேளாண் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கொல்லிமலையில் விளையும் மிளகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொல்லிமலை உழவர் நிறுவன தலைவர் நாகலிங்கம் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story