எருமப்பட்டி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடி திட்டப்பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

எருமப்பட்டி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடி திட்டப்பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
X

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்,  திட்டப்பணிகளை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார். 

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.37 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.

சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முத்துகாப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, தேவராயபுரம், வரகூர், பவித்திரம்புதூர், காவக்காரம்பட்டி, கோனங்கிப்பட்டி, திப்ரமகாதேவி, புதுக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துக்களில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அனுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், குடிநீர் குழாய் அமைத்தல், சிறுபாலம் கட்டுதல், கான்கிரீட், பேவர் பிளாக் மற்றும் தார் ரோடு போடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் துவக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.

எருமப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, திட்டப்பணிகளை துவக்கி வைத்து. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். ஊராட்சி ஒன்றிய பிடிஓக்கள் குணாளன், அருளாளன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் விமலா மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!