எருமப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை
X
எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. அவரது மகன் மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 10 நாட்களுக்கு கவுசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்நிலையில், சம்பவத்தன்று மணிகண்டனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வெறுப்படைந்த அவர், தனது மாமியார் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது மாமியார் ராணி, மனைவி கவுசல்யா ஆகியோர் மணிகண்டனை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே மணிகண்டனர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்