சேந்தமங்கலத்தில் திடீர் திருப்பம்! அமமுக வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்

சேந்தமங்கலத்தில் திடீர் திருப்பம்!  அமமுக வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்
X
சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

சேந்தமங்கலத்தில் திடீர் திருப்பம். அமமுக வேட்பாளர் அதிமுகவில் இணைவு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளராக இருந்தவர் பி.சந்திரன். இவர், சேந்தமங்கலத்தில் அமமுக சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், திடீரென திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் இந்த செயல் அமமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சந்திரன் கூறுகையில், தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தூண்டுதல் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தேன். ஆனால், அமமுகவில் இருந்த போதும் தான் எப்போதும் அதிமுக தொண்டராக மனதில் எண்ணி வந்தேன். அதன் காரணமாக தற்போது மீண்டும் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டேன். சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!