/* */

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி  திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
X

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஏ.மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஏ.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஏ.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் 1998 ஆம் ஆண்டு 100 வீடுகளுடன் கட்டப்பட்டது. தற்போது இந்த சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகபட்சம் ரூ.50,000 என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சமத்துவபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விளையாட்டு மைதானம், நுழைவாயில் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்டவை மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஏ.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து பாடப்புத்தகங்களை வாசிக்கச் செய்தும், கதைகள் மற்றும் பாடல்களை பாடச்சொல்லியும் ஆய்வு செய்தார். பின்னர்,

வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திப்ரமாதேவி பஞ்சாயத்து, அருந்ததியர் காலனியில் கழிவு நீர் கால்வாயில் வரும் நீரை வடிகட்டி சுத்திகரிப்பு செய்வதற்காக ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 26 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு