கொல்லிமலையில் பழுதடைந்துள்ள ரோட்டை சீரமைத்து தரக்கோரி ஜமாபந்தியில் மனு

கொல்லிமலையில் பழுதடைந்துள்ள ரோட்டை சீரமைத்து தரக்கோரி ஜமாபந்தியில் மனு
X

கொல்லிமலையில் நீண்டகாலமாக பழுதடைந்துள்ள நிலையில் உள்ள ரோடு.

கொல்லிமலையில் பழுதடைந்துள்ள ரோட்டை சீரமைத்து தரக்கோரி ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கொல்லிமலையில் நீண்டகாலமாக பழுதடைந்துள்ள ரோட்டை சீரமைக்க கோரி ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது. கொல்லிமலை தாலுக்கா அலுவலகத்தல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வெள்ளக்கல் ஆறு பஸ் ஸ்டாப்பில் இருந்து ஊர்முடிப்பட்டி வரை செல்லும் ரோடு கடந்த 4 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக சேலூர் நாடு பஞ்சாயத்து நிர்வாகம், கொல்லிமலை பிடிஓ அலுவலகம் உள்ளிட்டவற்றில் பல முறை மன அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும், அவ்வழியே செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி வரை உள்ள ரோட்டை சீரமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் கூறினர்.

Tags

Next Story
ai in future agriculture