சேந்தமங்கலம் அருகே பிஏசிபி சார்பில் ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கல்

சேந்தமங்கலம் அருகே பிஏசிபி சார்பில்  ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கல்
X

பொட்டணம் கூட்டுறவு சொசைட்டி சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உதவிகளை மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.

பொட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்,விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிர் கடன் உதவிகளை வழங்கினார். மொத்தம் 20 விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன், கூட்டுறவு சார்பதிவாளர் ஜோதீஸ்வரி, கூட்டுறவு சங்க செயலாளர் முத்துசேகர் உள்ளிட்டபலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!