கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது

கொல்லிமலையில் கள்ளத்துப்பாக்கி  பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகள் கைது
X
கொல்லிமலை அருகே, தோட்டத்தில் கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள கொல்லிமலை, திருப்புலிநாடு பஞ்சாயத்து, படசோலை கிராமத்தில் விவசாயத் தோட்டங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக, வாழவந்திநாடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சந்தேகத்துக்கிடமான தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு கள்ளத் துப்பாக்கிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக விவசாயிகள் நடேசன் (57), பாலகிருஷ்ணன் (31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology