நாமக்கல் அருகே மனைவி கண்டித்ததால் பஞ்சு வியாபாரி தற்கொலை

நாமக்கல் அருகே மனைவி கண்டித்ததால் பஞ்சு வியாபாரி தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் பஞ்சு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (43). பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சுரேந்திரன் பஞ்சு வியாபாரம் செய்யாமல் மது குடித்து இருந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. சம்பவத்தன்று மதுகுடித்து விட்டு வந்த சுரேந்திரனை திவ்யா கண்டித்துள்ளார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் மனமுடைந்த சுரேந்திரன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் அடைந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே சுரேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!