கொல்லிமலை தோட்டக்கலைத்துறை பண்ணையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
கொல்லிமலையில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப் பண்ணையை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பயணியர் மாளிகையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, மகளிர் திட்டத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு திட்டப்பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வு நடத்தி, அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து சோளக்காடு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அன்னாசிப் பழங்கள் விற்பனை முறை குறித்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். செங்கரையில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவ, மாணவிகளுடன் ஆன்லைன் வகுப்பு குறித்து கலந்துரையாடினார்.
மேலும், எடப்புளி நாடு பஞ்சாயத்து செங்கரை பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் காளியம்மன் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் காகிதப் பை உற்பத்தி முறை குறித்து கேட்டறிந்தார். எடப்புளிநாடு பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் வழியாக வேளாண் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ரூ. 10 லட்சம் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள வேளாண் இயந்திர வாடகை மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu