கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் கொல்லிமலையில் தூய்மைப்பணி

கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் கொல்லிமலையில் தூய்மைப்பணி
X

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், உலக பூமி தின விழாவை முன்னிட்டு, கொல்லிமலையில் தூய்மைப்பணி நடைபெற்றது.

கொல்லிமலைப் பகுதியில் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் உலக பூமி தின விழா நடைபெற்றது.

தமிழ்நாடுகோழிப் பண்ணையாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் தேசிய பசுமைப்படை மற்றும் சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்திய உலக பூமி தினம் கொல்லிமலை, காரவள்ளி செக்போஸ்ட் அருகில் நடைபெற்றது.

கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மண், நீர் மற்றும் காற்றிற்கு மாசு உண்டாக்கும் கழிவு பொருட்களை சுத்தம் செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது. காரவள்ளியில் இருந்து கொல்லிமலை சோளக்காடு வரை 70 கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடிகள் மற்றும் குப்பைகளை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர்.

கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ், துணைச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story