எருமப்பட்டி அருகே கேபிள் டிவி ஆபரேட்டருக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே கேபிள் டிவி ஆபரேட்டருக்கு  கத்திக்குத்து: வாலிபர் கைது
X
எருமப்பட்டி அருகே கேபிள் டிவி ஆபரேட்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி அருகே கேபிள் டிவி ஆபரேட்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தா.பேட்டை அருகே உள்ள மகாதேவி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (35). இவர் பவித்திரம் புதூர், நல்லப்பநாயக்கன்பட்டி, வேலம்பட்டி ஆகிய பகுதிகளில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று காலை ராஜா, கேபிள் டிவி கட்டணம் வசூலிப்பதற்காக பவித்திரம் புதூர் வழியாக டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பவித்திரம் புதூர் தெற்கு வீதியை சேர்ந்த நல்லதம்பி மகன் ராஜ்குமார் (23) என்பவர் டூ வீலரை வழிமறித்து, ராஜாவிடம் தகராறு செய்தார். பின்னர் ராஜ்குமார் வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். காயமடைந்த ராஜா சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future