எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
X
பைல் படம்.
எருமப்பட்டி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திப்பட்டியை சேர்ந்தவர் மலையாளன். இவருடைய மகன் சரவணன் (32). கட்டிட மேஸ்திரி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்தார். இதையடுத்து அவரது மனைவி அழகேஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!