சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சாய் பாலமுருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் குமாரசாமி, லியோ பேட்மின்டன் குழு தலைவர் மாவளவன், செஞ்சுரி கிரிக்கெட் குழு செயலாளர் நவ்சாத், மற்றும் சுமார் 200 முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பள்ளி விளையாட்டு மைதானத்தை வேறு அரசு அலுவலகங்களுக்கு கையகப்படுத்துவது இல்லை என தீர்மானித்த மாவட்ட கலெக்டருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பள்ளியின் கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை, வகுக்க குழு அமைப்பது எனவும், சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி பெற்ற அளவை விட, அதிகமாக எடுத்துள்ள நிலத்தை திரும்ப மீட்டு பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu