/* */

எருமப்பட்டி: ஆட்டுக்குட்டி மீட்க முயன்ற முதியவர் கிணற்றில் மூழ்கி பலி

எருமப்பட்டி அருகே கிணற்றில் இருந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி: ஆட்டுக்குட்டி மீட்க  முயன்ற முதியவர் கிணற்றில் மூழ்கி பலி
X

எருமப்பட்டி அருகே, உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (71). இவர் ஆடு வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி லட்சுமி, மகன் வெங்கடாசலம் ஆகியோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர், அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில், கிணற்றில் 10 அடி தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் அருணாசலத்தின் உடலை மீட்டனர். ஆட்டுக்குட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?