சேந்தமங்லத்தில் நடந்த கலவர சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது

பைல் படம்.
கடந்த 3ம் தேதி, கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி விழாவுக்கு செல்வதற்காக ஒரு சமூகத்தினர் சேந்தமங்கலம் வழியாக வாகனங்களில் சென்றனர். அவர்கள் சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை அருகே வந்தபோது, எதிரே சில வாகனங்களில் மற்றொரு சமூகத்தினர் வந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
போலீஸ் அங்கு வருவதற்குள், இரு தரப்பை சேர்ந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த, கலவரம் தொடர்பாக கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த அருள்முருகன், சதீஷ்குமார், பசுபதிபாளையத்தை சேர்ந்த தங்கமணி, குளத்தூர் பட்டியை சேர்ந்த பிரேம்குமார், சேந்தமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்த சீனிவாசன், வல்வில் ஓரி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கலவர சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu