சேந்தமங்கலம் அருகே ரூ.15.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சேந்தமங்கலம் அருகே ரூ.15.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
X

சேந்தமங்கலம் அருகே ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ பொன்னுசாமி

Road Work Construction -சேந்தமங்கலம் அருகே ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்.

Road Work Construction - நாமக்கல் மாவட்டம், பழையபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடுகப்பட்டி, அலங்காநத்தம், பழையபாளையம் ரோடு சீரமைக்கவும் மற்றும் சிவநாயக்கன்பட்டி ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைக்கவும், 2.40 கி.மீ ரோட்டை அகலப்படுத்தி இருவழிச்சாலையாக அமைக்கவும், தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி சாலை அமைப்பு பணிகள் துவக்க விழாவுக்கான பூமி பூஜை நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன், சேந்தமங்கலம் உதவிப் பொறியாளர் பிரனேஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்ரமணியம், கான்ட்ராக்டர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story