/* */

கொல்லிமலையில் வேன் மீது இருச்சக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு

கொல்லிமலையில் வேன் மீது இருச்சக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
X

கொல்லிமலை தெம்பலம் அருகே சுற்றுலா வாகனமும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,

இராணிபேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்து அரப்பளீஸ்வர கோவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செம்மேடு அருகே திரும்பிக் கொண்டிருந்தனர். சுற்றுலா வாகனத்தை ஓட்டுநர் முத்துச்செல்வம் ஓட்டிவந்த நிலையில் வேன் தெம்பலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆரியூர்நாடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த கஜேந்திரனை என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.‌ இச்சம்பவம் குறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்த நிலையில் அதிவேகமாக வந்து சுற்றுலா வாகனத்தின் நேருக்கு நேர் மோதியது உயிரிழப்பு காரணம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

Updated On: 8 March 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!