திமுகவினர் மூக்கை உடைப்பார்கள்,ஸ்டாலின் பஞ்சாயத்து செய்வார் : முதல்வர் இபிஎஸ்

திமுகவினர் மூக்கை உடைப்பார்கள்,ஸ்டாலின் பஞ்சாயத்து செய்வார் : முதல்வர் இபிஎஸ்
X

திமுகவினர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரண்டாம் நாளாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், சேந்தமங்கலம் பகுதியில் 2011 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சாலைகளையும் தற்போதுள்ள சாலைகளையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சேந்தமங்கலம் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி, புதிய நீதிமன்றம் கொடுத்துள்ளோம்.

295 சாலைகள் 155 கோடியில் சேந்தமங்கலம் பகுதியில் போடப்பட்டுள்ளன. அதிமுக அரசு மக்களுக்கு செய்தது ஸ்டாலினுக்கு மட்டும் தெரியாது. அவருக்கு ஏழை மக்களை கண்ணுக்கு தெரியாது. திமுகவை சேர்ந்தவர்கள் கடையில் பொருள் வாங்குவார்கள் பணம் கொடுக்க மாட்டார்கள், பரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு பணத்தை கேட்டால் மூக்கை உடைப்பார்கள், மறு நாள் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார் என்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!