போதை பொருள் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு, மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ் சார்பில் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு சமுதாய சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சூரிய பிரகாஷ் பங்கேற்று "போதை பொருள் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில், வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள், போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் குறித்தும், இந்தப் பழக்கத்திலிருந்து வெளியேறி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டு மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ் கண்ணன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி, கல்லூரி போதை பொருள் தடுப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu