சேந்தமங்கலம் சின்ன தேர்முட்டி அருகே பா.ஜ. கண்டன ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் சின்ன தேர்முட்டி அருகே பா.ஜ. கண்டன ஆர்ப்பாட்டம்
X
சந்தையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை: பா.ஜ. ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சந்து கடைகளை மூட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேந்தமங்கலம் சின்ன தேர்முட்டி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார், முன்னாள் ஒன்றிய தலைவர் நடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்து கடைகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் சந்து கடைகளை மூட வேண்டும் என்றும் கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி தலைவர் கணபதி, ஒன்றிய துணை தலைவர்கள் கவிதா, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story