காந்தியின் வழியில்: திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை!

காந்தியின் வழியில்: திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை!
X
திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் : திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வர், சுற்றுலாத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டம்

நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை ஓய்வூதியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில், அந்தச் சங்கத்தின் செயலாளர் கு.அவிநாசிலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.

சிறுதொழில் மானியம் கோரிக்கை

சிறு தொழில்கள் தொடங்கி நடத்திட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 95 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்குவதுபோல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது