போதமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

போதமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
X

பைல் படம்.

போதமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் , இராசிபுரம் அருகே உள்ள போதமலையில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீரனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (29) என்பவர் கல்லாங்குளம் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் மற்றும் 150 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக தங்கராஜை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி