வெண்ணந்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெண்ணந்தூர் அருகே வாகனம்  மோதி தொழிலாளி உயிரிழப்பு
X
வெண்ணந்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அடுத்துள்ள, மேற்கு வலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (32). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரோட்டைக் கடந்து செல்ல முயன்றார்; அந்த நேரத்தில், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மோட்டார் வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்த வந்த வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார், பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!