டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

Murder Case | Tiruvallur News
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தொழிலாளி உயிரிழந்தார்.

ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(56). திருமணமாகாத இவர், கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக எடை போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று சுப்பிரமணியம் தனது டூ வீலரில், நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டூர் பகுதியை சேர்ந்த குருசந்திரன் (24) என்பவர் மற்றொரு டூ வீலரில் வந்தார். இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மொதிக்கொண்டன. இந்த விபத்தில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

குருசந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் இறந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, குருசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்