இராசிபுரம் அருகே டூ வீலர் கவிழ்ந்து விபத்து: மேஸ்திரி பலி

இராசிபுரம் அருகே டூ வீலர் கவிழ்ந்து விபத்து: மேஸ்திரி பலி
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே டூ வீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இராசிபுரம் தாலுக்கா, மங்களபுரம் பஞ்சாயத்து செம்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (35). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று தனது டூ வீலரில் மங்களபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரோட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக டூ வீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future education