இராசிபுரம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்: சிறுமி உட்பட 5 பேர் படுகாயம்

இராசிபுரம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்: சிறுமி உட்பட 5 பேர் படுகாயம்
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆயில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அதே சமயம் இராசிபுரத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் சீராப்பள்ளி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சின்ன காக்காவேரி அருகே இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிறுமி உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைகாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business