மங்களபுரம் அருகே ஆட்டோ மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

மங்களபுரம் அருகே ஆட்டோ மோதி டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News in Tamil - மங்களபுரம் அருகே ஆட்டோ மோதியாதல் டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Today Accident News in Tamil -சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). மும்பையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அகிலா (30). வாழப்பாடி வந்த மகேந்திரன், அங்கிருந்து ராசிபுரம் தாலுக்கா மெட்டாலாவிற்கு தனது டூ வீலரில் வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பிச்சென்றார். மங்களபுரம் அருகே அவர் சென்றபோது, எதிர்திசையில் வந்த ஆட்டோ ஒன்று டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மங்களபுரம் போலீஸ் எஸ்.ஐ திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு