சிறுமியை கடத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்  போக்சோ சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டையில் சிறுமியை கடத்திச்சென்ற, 2 கல்லூரி மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் மகிழன் (20). திருச்செங்கோடு பருத்திப்பள்ளி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சிபி சக்கரவர்த்தி (20). மகிழனும், சிபி சக்ரவர்த்தியும் ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள்.

இந்த நிலையில் மகிழன் தொட்டிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி நண்பர் சிபி சக்கரவர்த்தி உதவியுடன் கடத்திச் சென்றார். அந்த சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் நடந்ததை கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!