நாமகிரிப்பேட்டையில் ரூ.9 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏல விற்பனை

நாமகிரிப்பேட்டையில் ரூ.9 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏல விற்பனை
X
நாமகிரிப்பேட்டையில் ரூ.9 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏல விற்பனை நடைபெற்றது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (ஆர்சிஎம்எஸ்), நாமகிரிப்பேட்டை கிளையில் வாரதம் தோறும் மஞ்சள்ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை கொள்முதல் செய்தனர்.

ஏலத்திற்கு விரலி ரக மஞ்சள் 200 மூட்டை, உருண்டை ரகம் 50 மூட்டை, பனங்காலி ரகம் 5 மூட்டை வரத்து வந்தது. இதில் விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 865 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 969-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.6 ஆயிரத்து 812-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.14 ஆயிரத்து 445 முதல் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரத்து 512-க்கும் ஏலத்தில் விலை போனது. ஏலத்தில் மொத்தம் 255 மஞ்சள் மூட்டைகள் ரூ.9 லட்சத்துக்கு விற்பனையானது.

Tags

Next Story
ai future project