இராசிபுரத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனுக்கு நினைவஞ்சலி

இராசிபுரத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனுக்கு நினைவஞ்சலி
X

இராசிபுரத்தில்  மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தா.பாண்டியனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், கட்சியின் மறைந்த மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த தா.பாண்டியன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன், திராவிடர் விடுதலை கழக நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா, முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!