இராசிபுரத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

இராசிபுரத்தில் சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
X
பைல் படம்.
இராசிபுரத்தில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி முன் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சிப் பகுதியிலங் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள சாலைகள் ஆங்காங்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது.

இதனால் நடந்து செல்பவர்களும், டூ வீலர்களில் செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் கணபதி விலாஸ் ரைஸ் மில் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் இளங்கோ தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும் குழியுமான ரோடுகளை சீரமைக்க கோரியும், இறைச்சி கடை கழிவுகள் ரோட்டில் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story