இராசிபுரம் நகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
இராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம் நகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. நகராட்சிப் பகுதியில் உள்ள, சுவாமி சிவானந்தா சாலை அரசு உயர்நிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பதற்றத்திற்கான காரணங்கள் குறித்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கண்காணிப்பு பணிகளுக்காக மைக்ரோ அப்சர்வர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆன்லைனில் கண்காணிக்கப்பட வேண்டும். போதிய வெளிச்சம் இல்லாத வாக்குச்சாவடிகளில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், சாய்வு தள வசதிகள் உள்ளிட்டவைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நகராட்சி கமிஷனர் அசோக் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu