மரவள்ளிக்கிழங்கில் செம்பேன் தாக்குதல்: கட்டுப்படுத்தும் முறை வெளியீடு

மரவள்ளிக்கிழங்கில் செம்பேன் தாக்குதல்: கட்டுப்படுத்தும் முறை வெளியீடு
X
மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுதறைகளை வேளாண்மைத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இராசிபுரம் வட்டாரத்தில், மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுதறைகள் குறித்து வேளாண்மைத்துறையினர் ஆலோõனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம், வெண்ணந்தூர் வட்டாரங்களில் மரவள்ளிக் கிழங்கு செடி 1,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 6 மாத வயதுடைய மரவள்ளி செடியில் செம்பேன், பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனால் அதிகளவு சேதம் ஏற்படுகிறது. செம்பேன் தாக்குதலுக்கு உள்ளான செடியின் இலைகளின் நுனிப் பகுதியிலிருந்து பச்சையம் இழந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுவதுடன், இலை பழுத்து உதிர்ந்து விடுகின்றது.

இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இப்பேன் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்ட உடனே ஒபரான் என்ற பூச்சிக் கொல்லி மருந்தை 1 மி.லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், பூஞ்சான் தாக்குதல் காணப்பட்டால் மேன்கோசைப் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூஞ்சைக் கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 3 கிராம் வீதம் கலந்து 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

கைத்தெளிப்பான் மூலம் செடியின் அனைத்து பாகங்களில் படும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இவ்வாறு மருந்து தெளிப்பதன் மூலம் செம்பேன் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். மேலும் மரவள்ளிக் கிழங்கு செடியில் மாவுப்பூச்சிக் காணப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி தீயிட்டு எரித்துவிட்டு பிலோனிக்காமிட் (1 லிட்டர் தண்ணீருக்கு 0.30 கி மருந்து) தாயாமீதாக்சாம் (0.50 கிராம் 1லிட்டர் தண்ணீருக்கு) அல்லது ஸ்பைரோடெட்ராமேட் (1.25 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு) மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil