இராசிபுரம்: ஓடும் பஸ்சில் இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

இராசிபுரம்: ஓடும் பஸ்சில் இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
X
இராசிபுரம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இராசிபுரம் அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் இனியா ஸ்ரீ (15) திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் இருந்து திம்மநாயக்கன்பட்டிக்கு, இனியாஸ்ரீ தனியார் பஸ்சில் சென்றுள்ளார். திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு சற்று தொலைவில் பஸ் நிறுத்தம் உள்ளது.

தனியார் பஸ் டிரைவர், அங்கு பஸ்சை நிறுத்தாமல், பள்ளிக்கு முன்பாக பஸ்சின், வேகத்தை குறைத்து மாணவியை விரைந்து இறங்குமாறு கேட்டுள்ளார். தேர்வு பதற்றத்தில் இருந்த மாணவி, பஸ் நிறுத்துவதற்கு முன்பே அவசரமாக பஸ்சில் இருந்து எதிர்திசையில் இறங்கியுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயமடைந்து, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்