ஆடிப்பெருக்கு: மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்

ஆடிப்பெருக்கு: மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்
X

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்புஅலங்காரம் ந டைபெற்றது.

மெட்டாலா ஆஞ்சநேயர் சாமிக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் மெட்டாலா அருகே அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், இந்த வழியாக சென்னை, புதுச்சேரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கார் மற்றும் லாரிகளில் செல்பவர்கள், இங்கு வ õகனங்களை நிறுத்தி, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, நல்லெண்ணை, பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சள் உள்ளிட்ட வாசனைப் பொருட்களால் அபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!