இராசிபுரம் அருகே தந்தையை தாக்கிய மகன்: கைது செய்த போலீசார்

இராசிபுரம் அருகே தந்தையை தாக்கிய மகன்: கைது செய்த போலீசார்
X
இராசிபுரம் அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கலியபெருமாள், விவசாயி. இவருடைய மகன் ஜெகதீஸ்குமார் (37), லாரி டிரைவர். கலியபெருமாள் வைத்திருந்த 50 சென்ட் நிலத்தை தனது பெயரில் எழுதி வைக்கும்படி ஜெகதீஸ்குமார் வற்புறுத்தியுள்ளார். அதற்கு கலியபெருமாள் மறுத்துள்ளார்.

இதுசம்மந்தமாக தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்குமார், மரக்கட்டையால் கலியபெருமாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கலியபெருமாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில், ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை தாக்கிய ஜெகதீஸ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai as the future