13வயது சிறுமியை கடத்திய சிற்பி போக்சோவில் கைது

13வயது சிறுமியை கடத்திய சிற்பி போக்சோவில் கைது
X

பைல் படம்.

13 வயது சிறுமியை கடத்திச்சென்ற சிற்பியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையூர் அருகே உள்ள காளியப்பநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகன் அய்யப்பன் (24). கோயில் சிற்பி. இவர் கடந்த 3 மாதங்களாக ராசிபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் சிற்ப வேலைகள் செய்து வந்தார். இந்த நிலையில் அய்யப்பன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிற்பி அய்யப்பன் அந்த சிறுமியுடன் அவரது சொந்த ஊரில் இருப்பதைக் கண்டுபிடித்த ராசிபுரம் போலீசார் அங்கு சென்று அய்யப்பனை கைது செய்து, சிறுமியை மீட்டனர். பின்னர் போலீசார் அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி நாமக்கல்லில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!