வெண்ணந்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

வெண்ணந்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

வெண்ணந்தூர் அருகே 12ம் வகுப்பு மாணவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த, தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி, வையப்பமலையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் கிருத்திகா (16). இவர் சக்கராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கிருத்திகா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதற்காக சேலத்தில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கிருத்திகா தங்களது ஓட்டு வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story